குமரி மாவட்டத்தில் உள்ள கோதையாற்றில் வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்புப்படையினர் பத்திரமாக மீட்டனர்.
திற்பரப்பு அருவியிலிருந்து 300 மீட்டர் கீழ்ப் பகுதியில் அமைந்துள்ள இந்த ஆற்றுப்பகுதியில் நீர்வரத்து திடீரென அதிகரித்தது.
அப்போது ஆற்றின் மறுகரையில் குளித்துக்கொண்டிருந்த நபர்கள் வெளியே வரமுடியாமல் சிக்கித் தவித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் கயிறுகட்டி அனைவரையும் பாதுகாப்பாக மீட்டனர்.