கன்னியாகுமரி மாவட்டம், பூதப்பாண்டியில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த தற்காலிக மின் வாரிய ஊழியரை வெட்டிக் கொன்றவர் கைது செய்யப்பட்டார்.
கண்டளவு பகுதியைச் சேர்ந்த தற்காலிக மின் வாரிய ஊழியரான எபனேசர் என்பவர், திட்டு விளை நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது அவரை பின்தொடர்ந்து வந்த இளைஞர் ஒருவர், தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் வெட்டியதில் எபனேசர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
விசாரணையில், கொலைக் குற்றத்தில் ஈடுபட்டது இடைக்கோட்டைச் சேர்ந்த சேர்ந்த ஜெனித் என்பதும், தாயாரை தரக்குறைவாக திட்டியதால் ஆத்திரத்தில் எபனேசரை வெட்டியதும் தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் ஜெனித்தை கைது செய்தனர்.