நீதிமன்றம் உத்தரவிட்டும் விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்காத சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை ஜப்தி செய்வதற்கான நோட்டீஸ் வழங்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
ரயில் தண்டவாள பணிக்காக கொண்டலாபட்டியை சேர்ந்த 5 விவசாயிகளின் நிலத்தை அரசு கையகப்படுத்தியது. இதற்காக அவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திற்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.
ஆனால் விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கப்படாததால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு நீதிமன்ற ஊழியர்களுடன் வருகை தந்த விவசாயிகள் அலுவலகத்தை ஜப்தி செய்வதற்கான நோட்டீஸை வழங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.