ராமநாதபுரம் மாவட்டம், மாடக்கொட்டான் பகுதியில் தேநீர் அருந்த வந்த நபர்களை போதை ஆசாமிகள் சரமாரியாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
மாடக்கொட்டான் பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் தேநீர் குடிப்பதற்காக இருசக்கர வாகனத்தில் 2 பேர் வந்தனர். அப்போது அங்கிருந்த 3 பேர் மதுபோதையில் அவர்களோடு தகராறில் ஈடுபட்டதோடு அவர்களை சரமாரியாக தாக்கிவிட்டு தப்பியோடினர்.
இது தொடர்பான வீடியோ வெளியாகி வைரலானதை அடுத்து போதை ஆசாமிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்தனர். இந்நிலையில் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த போலீசார் 3 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.