கொல்கத்தாவில் பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரிக்கப்படுகிறது.
கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பெண் டாக்டர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு, கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாள்தோறும் போராட்டங்கள் தீவிரமடைந்து வருகின்றன. இந்நிலையில் இந்த வழக்கை உச்சநீதிமன்றம் தாமாக முன் வந்து விசாரணைக்கு எடுத்தது. தலைமை நீதிபதி சந்திரசூட், நீதிபதிகள் பர்திவாலா, மனோஜ் மிஸ்ரா அமர்வில் வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது.