இந்தியாவில் கொட்டும் பணம்! : வருவாயை அள்ளும் ஆப்பிள் நிறுவனம்!
Jul 12, 2026, 01:39 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இந்தியாவில் கொட்டும் பணம்! : வருவாயை அள்ளும் ஆப்பிள் நிறுவனம்!

Murugesan M by Murugesan M
Aug 20, 2024, 09:35 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்தியாவில் தொழில்நுட்ப நிறுவனங்களின் மொத்த உற்பத்தியில் 14 சதவீதம் பங்கை தன்னிடம் வைத்திருக்கும் ஆப்பிள் நிறுவனம், கடந்த 50 ஆண்டுகளில் நாட்டில் வேகமாக வளர்ந்துவருகிறது. அது குறித்த ஒரு செய்தி தொகுப்பு.

பிரதமர் மோடியின் தலைமையிலான ஆட்சியில், நாட்டில் நுகர்வோரின் வாங்கும் திறன் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், ஆப்பிளின் உலகளாவிய உற்பத்தியில் இந்தியாவின் பங்கு கணிசமாக வளர்ந்திருக்கிறது.

இந்தியாவில் தங்கள் விற்பனையை அதிகரிக்க தீவிரமாக செயல்பட்டு வரும்,ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான டிம் குக், கடந்த ஆண்டு, நாட்டின் முதல் இரண்டு ஆப்பிள் விற்பனை நிலையத்தைத் திறந்து வைத்தார்.

அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையிலான வர்த்தக உறவில் சிக்கல்கள் ஏற்பட்டிருக்கும் சூழலில், சீனாவை ஒரு அபாயகரமான சந்தையாகவே அனைத்து தொழில்நுட்ப நிறுவனங்களும் பார்க்கின்றன. இந்நிலையில், ஆப்பிள் இந்திய சந்தையில் கால் வைத்தது.

சீனாவில் உற்பத்தியாகும் மலிவான ஆண்ட்ராய்டு போன்களே இந்தியாவில் ஆதிக்கம் செலுத்துகின்றன. குறிப்பாக நுகர்வோர் பயன்பாட்டில் உள்ள சுமார் 70 கோடி ஸ்மார்ட்போன்களில் வெறும் 3.5 சதவீதம் மட்டுமே ஆப்பிளின் ஐபோன்களாக உள்ளன.

ஆனால் ஆப்பிள் போன்களின் மொத்த உற்பத்தியில் 14 சதவீத ஐபோன்கள் இந்தியாவில் உற்பத்தியாகின்றன. இதுகடந்த ஆண்டை விட இரு மடங்கு அதிகமாகும் .

மேலும், ஆப்பிளின் மேக்புக்ஸ், ஐமாக்ஸ், ஐபாட்கள், வாட்ச்கள் மற்றும் ஏர்போட்களின் இந்திய விற்பனையும் கணிசமாக கூடியுள்ளது.

கடந்த நிதியாண்டில் சுமார் 1.35 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான ஐபோன்கள் ஏற்றுமதியான நிலையில் இந்த ஆண்டு 2 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது இந்தியாவிற்கு ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் குறிக்கிறது. ஆப்பிளின் உலகளாவிய ஏற்றுமதிக்கான முக்கிய மையமாக இந்தியா மாறிவருவதையே இது காட்டுவதாக கூறப்படுகிறது.

உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்க 2020 ஆண்டு பிரதமர் மோடியால் உற்பத்தியுடன் இணைக்கப்பட்ட ஊக்கத்தொகை (பிஎல்ஐ) திட்டம் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் தொடர்ச்சியாக, ஆப்பிள் நிறுவனம் 2021ம் ஆண்டு இந்தியாவில் தன் உற்பத்தியைத் தொடங்கியது. இப்போது, ஃபாக்ஸ்கான், விஸ்ட்ரான் மற்றும் பெகாட்ரான் ஆகிய நிறுவனங்கள் மூலம் ஆப்பிள் ஐபோன் உற்பத்தியைப் படிப்படியாக அதிகரித்து வருகிறது.

இந்தியாவில் உற்பத்தியாகும் ஐபோன்களில் ஏறத்தாழ 75 சதவீத ஐபோன்கள் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் மற்றும் மேற்கு ஆசிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. மீதமுள்ள 25 சதவீத ஐபோன்கள் உள்நாட்டில் விற்பனையாகின்றன.

இந்தியாவில் ஆப்பிள் நிறுவனம்,ஐபோன் உற்பத்தியைத் தொடங்கியதிலிருந்து 150,000 நேரடி வேலை வாய்ப்புக்களை உருவாக்கியுள்ளது. இதில் ஃபாக்ஸ்கானின் தொழிற்சாலையில் மட்டும் 41,000 பேருக்கு நேரடி வேலை வாய்ப்புக்கள் உருவாக்கப் பட்டுள்ளன.

ஆண்ட்ராய்டு போன்களின் ஆதிக்கம் நிறைந்த இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் ஆப்பிளின் பங்கு, 2 சதவீதத்தில் இருந்து இப்போது 6 சதவீதமாக உயர்ந்துள்ளது.

மேலும், ஆப்பிள் நிறுவனத்தின் இந்திய வருவாய் 68,000 கோடி ரூபாயை எட்டியிருக்கிறது. இந்த வருவாய் வளர்ச்சியில் iPhoneகள் மட்டுமின்றி, MacBooks, iPads, Watches, AirPods மற்றும் பிற ஆப்பிள் தயாரிப்புகளும் அடங்கும் என்பது குறிப்பிடத் தக்கது.

Tags: Money pouring in India! : The Apple company that generates revenue!
ShareTweetSendShare
Previous Post

கூகுள் ஆட்டத்திற்கு “வேட்டு” ! : PLAYSTORE-ல் போட்டியாளரை அனுமதிக்க உத்தரவு!

Next Post

கொல்கத்தாவில் பெண் மருத்துவர் கொலை வழக்கு! : தலைமை நீதிபதி சந்திரசூட் அமர்வில் இன்று விசாரணை

Related News

2030க்குள் இந்தியா – நியூசி. வர்த்தகம் இரட்டிப்பாகும்; பிரதமர் மோடி

வியட்நாமில் படகு கவிழ்ந்து விபத்து; 15 பேர் நீரில் மூழ்கி உயிரிழப்பு

H-1B முதல் GREEN CARD வரை….விதிகளை கடுமையாக்கும் ட்ரம்ப் அரசு : இந்தியர்களுக்கு பாதிப்பு? – சிறப்பு தொகுப்பு!

ஐபோன் விலையில் சாட்டிலைட் போன் அறிமுகப்படுத்திய BSNL : சிறப்பம்சங்கள் என்ன? – சிறப்பு தொகுப்பு!

ஆடி மாத ஆன்மிக சுற்றுலா – மீண்டும் அறிமுகம் செய்தது தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம்!

தலைமை செயலகம் கோயம்பேட்டுக்கு மாற்ற திட்டம் – தமிழக அரசு ஆலோசனை என தகவல்!

Load More

அண்மைச் செய்திகள்

யார் கையில் ஈரானின் தலையெழுத்து? : அதிகாரத்தை கைப்பற்ற போட்டி – சிறப்பு தொகுப்பு!

அரசு நிகழ்ச்சிகளில் முதலில் மாநிலப்பாடல் – உள்துறை அமைச்சகம் உத்தரவு!

கரூர் அருகே கோவில் சொத்துக்களை ஆக்கிரமிப்பாளர்களுக்கு தாரைவார்க்க துணியும் தவெக அரசு – இந்து முன்னணி கண்டனம்!

உலகளாவிய நம்பிக்கையின் அடையாளம் : இந்தியாவில் ரூ.32,000 கோடி முதலீடு செய்யும் ஆஸ்திரேலிய ஓய்வூதிய நிதியம் – சிறப்பு தொகுப்பு!

கட்டண உயர்வு ஏன்? – சேலம் தனியார் பேருந்துகளில் போஸ்டர் ஒட்டி விளக்கம்!

எரல் வாரச்சந்தை மூடப்பட்ட விவகாரம் – அதிமுக, திமுக இணைந்து போராட்டம்!

கரூர் அருகே கோவில் நிலம் அவசர அவசரமாக பட்டா கொடுக்கப்படுவது ஏன்? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

ஊழலை ஒழிப்பதாக மைக் முன் பேசுகின்றனர்; ஆனால் நடவடிக்கை இல்லை – சென்னை உயர் நீதிமன்றம்

வட இந்தியாவில் உள்ளவர்கள் தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகள் ஏதேனும் ஒன்றை கற்க வேண்டும் – ஆளுநர் அர்லேகர்

குடும்ப சொத்துக்களை காப்பாற்ற காவிரி விவகாரத்தில் கர்நாடகாவிடம் இணக்கமாக நடந்து கொண்ட கருணாநிதி – அமைச்சர் நிர்மல் குமார் குற்றச்சாட்டு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies