நடிகர் சூரி நடித்த ‘கருடன்’ படத்தைத் தொடர்ந்து, லார்க் ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில், கே.குமார் தயாரிக்கும் புதிய திரைப்படம் பற்றிய அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சூரி நடிக்கும் இந்த படத்தை ‘விலங்கு’ எனும் இணைய தொடரை இயக்கிய இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜ் இயக்குகிறார்.
இப்படத்தில் நடிக்கும் ஏனைய நடிகர்கள், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த விவரங்கள் விரைவில் வெளியிடப்படும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.