எதிர்க்கட்சியாகவும், மக்கள் பிரதிநிதிகளாகவும் பணியை தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறேன்! : வானதி சீனிவாசன்
Sep 13, 2025, 05:56 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

எதிர்க்கட்சியாகவும், மக்கள் பிரதிநிதிகளாகவும் பணியை தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறேன்! : வானதி சீனிவாசன்

Web Desk by Web Desk
Aug 20, 2024, 03:46 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நிபந்தனைகளை விலக்கி கோவை விமான நிலைய விரிவாக்கத்திற்காக தமிழக அரசு நிலங்களை கொடுத்தது மகிழ்ச்சியளிப்பதாக பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் பாஜக தேசிய மகளிரணி தலைவரும், கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து தொகுதி சம்பந்தமான கோரிக்கை மனுவை வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர்,

கோவையின் வளர்ச்சி மட்டுமல்லாது ஈரோடு, திருப்பூர், நீலகிரி மாவட்ட மக்களின் வளார்ச்சிக்கான கோவை விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக மாற்றுவதற்கான மத்திய அரசின் பணிகளுக்கு மாநில அரசால் தொய்வு ஏற்பட்டு வந்த நிலையில், நில எடுப்புக்கு மாநில அரசால் விதிக்கப்பட்ட அனைத்து நிபந்தனைகளும் நீக்குவதற்கு முதலமைச்சர் உறுதியளித்திருப்பதாக கூறினார்.

கோவை மாவட்டத்திற்கான மாஸ்டர் பிளான், ஈரோடு, திருப்பூர் நீலகிரி மாவட்டங்களை உள்ளடக்கியதாக இருக்க வேண்டும் எனவும், கோவை தெற்கு தொகுதிக்குட்பட்ட கோரிக்கை மனுக்களையும் முதலமைச்சரிடம் வழங்கியிருப்பதாகவும் வானதி சீனிவாசன் கூறினார்.

திமுக – பாஜக உறவு பற்றிய கதைகளுக்குள் செல்ல விரும்பவில்லை எனக் கூறிய வானதி சீனிவாசன், எதிர்க்கட்சியாகவும், மக்கள் பிரதிநிதிகளாகவும் எங்களின் பணியை தொடர்ந்து செய்து கொண்டிருப்பதாக கூறினார்.

மத்திய அரசின் பணியிடங்களில் ஆர்.எஸ்.எஸ் பின்புலம் உள்ளவர்கள் நேரடியாக நியமிக்கப்படுவது தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு, நாட்டின் பிரதமர் உட்பட அமைச்சர்களில் 99 சதவிகிதம் பேர் ஆர்.எஸ்.எஸ் அமைப்பைச் சேர்ந்தவர்கள் தான் எனவும், நாட்டையே ஆர்.எஸ்.எஸ். அமைப்பிடம் ஒப்படைத்திருக்கும் நிலையில் இது போன்ற கேள்விகள் ஏற்புடையதல்ல என வானதி சீனிவாசன் தெரிவித்தார்.

 

Tags: I am continuing to work as an opposition party and as a representative of the people! : Vanathi Srinivasan
ShareTweetSendShare
Previous Post

ஆட்டோ மீது இருசக்கர வாகனம் மோதி விபத்து! – வீடியோ வெளியானது!

Next Post

யுபிஎஸ்சி நேரடி நியமன முறை ரத்து! – ஜிதேந்திர சிங்

Related News

முதல்வர் 5 முறை வெளிநாட்டு பயணம் மேற்கொண்டபோதிலும் எந்த பயனும் இல்லை – இபிஎஸ் குற்றச்சாட்டு!

அனைவரும் ஒன்றிணைந்து தமிழகத்தில் மீண்டும் என்டிஏ ஆட்சியை அமைக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன் அழைப்பு!

2047-ம் ஆண்டு இந்தியாவின் கனவை நினைவாக்க வேண்டும் – மத்திய அமைச்சர் அர்ஜுன் ராம் மேக் வால்

இன்று மணிப்பூர் செல்கிறார் பிரதமர் மோடி – பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!

கைகொடுக்கும் ஃபிரான்ஸ் : இந்தியாவில் தயாராகும் போர் விமான எஞ்சின்!

இந்து தேசமாகும் நேபாளம் : மீண்டும் மன்னராட்சி மலர வலுக்கும் ஆதரவு?

Load More

அண்மைச் செய்திகள்

அந்நிய சக்திகளின் கட்டுப்பாட்டில் ராகுல் காந்தி? : வாக்கு திருட்டு விவகாரத்தில் ஆதாரம் வெளியிட்ட பாஜக!

பின்லாந்தில் வாழ ஆசையா? : உலகின் மிகவும் மகிழ்ச்சியான நாட்டில் பொன்னான வாய்ப்பு!

பிரேசில் முன்னாள் அதிபருக்கு 27 ஆண்டுகள் சிறை தண்டனை – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கண்டனம்!

இந்தியாவில் கல்வி பயின்றவர் இடைக்கால தலைவரா? – நேபாளத்தில் Gen-Z இளைஞர்களின் ஆதரவு பெற்ற குல்மான் கிஷங்!

அமெரிக்காவை அதிரவைத்த சம்பவம் : ஒற்றை தோட்டாவில் ட்ரம்ப்பின் நண்பர் சுட்டுக்கொலை!

நேபாள மக்களின் குறையாத கோபம் : அடக்கி வாசிக்கும் ‘நெபோ கிட்ஸ்’!

முதியவரை காரை ஏற்றி கொலை செய்த திமுக பேரூராட்சி தலைவர் : முறைகேட்டை அம்பலப்படுத்தியால் தொடரும் கொடூரம்!

ஞான பாரதம் போட்டலை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்!

எல்லா செயல்களிலும் நேர்மையையும், உண்மையையும் கடைப்பிடித்து வருகிறேன் – அண்ணாமலை

இந்திய ஐடி துறைக்கு காத்திருக்கும் ஆபத்து : புதிய சட்டம் கொண்டு வருகிறது ட்ரம்ப் அரசு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies