கனமழை காரணமாக கோதையாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் மோதிரமலை பகுதியில் அமைக்கப்பட்டிருந்த தற்காலிக பாலம் நீரில் அடித்து செல்லப்பட்டது.
கன்னியாகுமரி மாவட்டம் மலையோர பகுதிகளில் பெய்துவரும் தொடர் கனமழை காரணமாக கோதையாற்றில் காட்டாற்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
இதனிடையே, மோதிரமலை அருகே 5 கோடி ரூபாய் மதிப்பில் மேம்பால பணிகள் நடைபெற்று வருவதால், அந்த பகுதியில் அமைக்கப்பட்டிருந்த தற்காலிக பாலம் நீரில் அடித்து செல்லப்பட்டது.
இதனால் 7 மலையோர கிராமங்கள் இடையே போக்குவரத்து துண்டிக்கப்பட்டதால், ரப்பர் தோட்ட தொழிலாளர்கள், பழங்குடியின மக்கள் போக்குவரத்து இன்றி அவதிக்குள்ளாகினர். மேலும், கோதையாற்றின் மறுபுறம் சிக்கிய அரசு பேருந்தை மீட்கும் பணியில் தீயணைப்புத்துறையினர் ஈடுபட்டனர்.