திருவள்ளூர் மாவட்டம், காக்களூர் ஆவின் பால் உற்பத்தி ஆலையில் பணியின்போது இயந்திரத்தில் சிக்கி பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
காக்களூர் ஆவின் பால் உற்பத்தி ஆலையில், பால் உற்பத்தியாகி வெளியே வரும்போது அதனை பிளாஸ்டிக் டப்பாக்களில் அடுக்கி வைக்கும் பணியில் உமா மகேஸ்வரி என்பவர் ஈடுபட்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக அவரது தலை முடி மற்றும் துப்பட்டா இயந்திரத்தில் சிக்கியது.
இதில் தலை துண்டாகி உமா மகேஸ்வரி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்த தகவலறிந்து வந்த போலீசார் உமா மகேஸ்வரியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.