நடிகர் சமுத்திரக்கனி நடித்துள்ள ‘திரு.மாணிக்கம்’ படத்தின் இசைக்கோர்வை வீடியோ வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது.
இயக்குனர் நந்தா பெரியசாமி இயக்கத்தில் நடிகர் சமுத்திரக்கனி நடித்துள்ள இந்தப்படத்திற்கு இசையமைப்பாளர் விஷால் சந்திரசேகர் இசையமைத்துள்ளார்.
நாசர், தம்பிராமையா, ஸ்ரீமன், வடிவுக்கரசி உள்ளிட்ட பலரும் நடித்துள்ள இப்படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இசைக்கோர்வை எனப்படும் மியூசிக் கம்போசிங் வீடியோவை படக்குழு வெளியிட்டது. இந்த வீடியோ ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வரும் நிலையில் இசையமைப்பாளர் விஷால் சந்திரசேகரை பலரும் பாராட்டி வருகின்றனர்.