ஐ.சி.சி தலைவர் பதவிக்கான வேட்பு மனுக்களை விருப்பமுள்ளவர்கள் தாக்கல் செய்யலாம் என ஐ.சி.சி தெரிவித்துள்ளது.
ஐ.சி.சி யின் தற்போதைய தலைவரான கிரேக் பார்க்லேவின் பதவிக்காலம் நவம்பர் மாதத்துடன் முடிவடைய உள்ளது. இதற்கான தேர்தல் நடைபெற்ற உள்ள நிலையில் விருப்பமுள்ளவர்கள் வரும் 27-ம் தேதிக்குள் வேட்பு மனுக்களை தாக்கல் செய்ய வேண்டும் எனவும், அவ்வாறு தேர்ந்தெடுக்கப்படுபவரின் பதவிக்காலம் 3 ஆண்டுகள் எனவும் ஐ.சி.சி அறிவித்துள்ளது.