ஜம்மு- காஷ்மீர் சட்டப் பேரவைத் தேர்தலையொட்டி, அதிகாரபூர்வ அறிவிக்கை வெளியாகியுள்ளது.
செப்டம்பர் 18, 25 மற்றும் அக்டோபர் 1 ஆகிய தேதிகளில் மூன்று கட்டமாக ஜம்மு-காஷ்மீர் சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெறும் என தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தெரிவித்திருந்தார்.
அந்த வகையில் முதல்கட்டமாக 24 தொகுதிகளில் வாக்குப் பதிவு நடைபெறுகிறது. இதற்கான அதிகாரபூர்வ அறிவிக்கையை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.