அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவில் இருசக்கர வாகன பேரணியை நிறைவு செய்த ராணுவ வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
78வது சுதந்திர தினத்தையொட்டி கடந்த வாரம் ராணுவ வீரர்கள் இருசக்கர வாகனத்தில் விழிப்புணர்வு பேரணி மேற்கொண்டனர். போர்ட் பிளேயரில் இருந்து திக்லிபூர் வரை 8 நாள் வாகனப் பேரணி மேற்கொண்ட ராணுவ வீரர்கள் சாடில் பீக் பகுதியில் தங்களது வாகனப் பேரணியை நிறைவு செய்தனர்.
அப்போது கிராம மக்கள் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து பள்ளி மாணவர்களுடன் கலந்துரையாடிய பாதுகாப்பு படை வீரர்கள், மரக்கன்றுகளை நட்டுவைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.