இங்கிலாந்து – இலங்கை அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று நடைபெற உள்ளது.
இலங்கை கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கு உட்பட்ட தொடர் என்பதால் இரு அணிகளும் தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வருகின்றன.
இந்நிலையில் இன்று பிற்பகல் 3.30 மணிக்கு இரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெறுகிறது.