சென்னை சென்ட்ரல் அருகே இளைஞரை கழுத்தை நெரித்து கொலை செய்த பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
எஸ்.எம் நகரை சேர்ந்த மணிவண்ணன் என்பவர் ஏற்கனவே திருமணம் ஆன
நாகம்மாள் என்ற பெண்ணுடன் சேர்ந்து வாழ்ந்து வந்துள்ளார். இவர் மது அருந்தும் பழக்கத்திற்கு அடிமையான நிலையில் நாகம்மாளிடம் மதுவாங்கி தரும்படி அடிக்கடி தொந்தரவு செய்து வந்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த நாகம்மாள், மணிவண்ணனின் கழுத்தை நெறித்துள்ளார். அப்போது மயக்கமடைந்த அவரை அப்பகுதியினர் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து நாகம்மாளை கைது செய்த போலீசார் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.