கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல், முட்டம் உள்ளிட்ட அரபிக்கடல் பகுதிகளில் கடல் சீற்றத்துடன் காணப்படுவதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
குமரிக்கடல் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும் எனவும் கடல் சீற்றத்துடன் காணப்படும் எனவும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது.
இந்நிலையில் கடும் சீற்றம் காரணமாக பைபர் படகு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல மீன்வளத்துறை தடை விதித்துள்ளது.