ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தலைமறைவாக உள்ள சம்போ செந்திலுக்கு லுக்அவுட் நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது.
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங், கடந்த மாதம் 5-ம் தேதி படுகொலை செய்யப்பட்டார். இவ்வழக்கில், 24 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ரவுடி திருவேங்கடம் என்கவுன்டர் செய்யப்பட்டார்.
இந்த கொலை வழக்கில் தொடர்புடைய பிரபல ரவுடி சம்போ செந்தில் மற்றும் அவரது கூட்டாளி வழக்கறிஞர் மொட்டை கிருஷ்ணனும் வெளிநாட்டிற்கு தப்பி சென்றனர். சிங்கப்பூரில் 10 நாட்கள் தங்கியிருந்த மொட்டை கிருஷ்ணனை பிடிக்க தூதரக உதவியை நாடிய நிலையில் துபாய் தப்பிச்சென்றதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், தலைமறைவாக உள்ள சம்போ செந்திலை பிடிக்க, சென்னை காவல்துறை இண்டர்போல் உதவியை நாடியதுடன், அவருக்கு லுக்அவுட் நோட்டீசும் கொடுத்துள்ளது.