சிவகங்கையில் தடையில்லா சான்று வழங்க லஞ்சம் பெற்ற தீயணைப்பு மற்றும் மீட்பு துறை துணை அலுவலர் கைது செய்யப்பட்டார்.
மானாமதுரை அடுத்த ஜீவாநகரை சேர்ந்த நாகராஜன், தீயணைப்பு மற்றும் மீட்புத்துறையின் துணை அலுவலராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் கோழிப்பண்ணைக்கு தடையில்லா சான்று பெறவந்த கற்பகமூர்த்தி என்பவரிடம் நாகராஜன் 5 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார்.
இதுகுறித்து கற்பகமூர்த்தி புகாரளித்த நிலையில் ரசாயனம் தடவிய பணத்தை நாகராஜிடம் வழங்குமாறு லஞ்ச ஒழிப்புத்துறையினர் அறிவுறுத்தினர். அதன்பேரில் கற்பகமூர்த்தியிடம் இருந்து நாகராஜன் பணம் பெற்றபோது அதிகாரிகள் அவரை கையும் களவுமாக கைது செய்தனர்.