தங்கலான் படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகள் இடம்பெற்றிருப்பதாக இயக்குநர் பா. ரஞ்சித் மீது பெண் வழக்கறிஞர் புகாரளித்துள்ளார்.
மெட்ராஸ், கபாலி, சார்பட்டா பரம்பரை உள்ளிட்ட படங்களை இயக்கிய பா. ரஞ்சித், தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களுள் ஒருவராக வலம் வருகிறார்.
இவரது இயக்கத்தில் சமீபத்தில் வெளியான தங்கலான் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது.
இந்நிலையில் தங்கலான் திரைப்படத்தில் வைணவ மதத்தை இழிவு படுத்தும் விதமாக காட்சிகள் இடம்பெற்றிருப்பதாக பெண் வழக்கறிஞரான பொற்கொடி என்பவர் புகார் அளித்துள்ளார்.
மேலும், படத்தில் இடம்பெற்றிருக்கும் சர்ச்சைக்குறிய காட்சிகளை நீக்க வேண்டும் என்றும், படத்தின் இயக்குநர் பா.ரஞ்சித் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். இது தமிழ் திரையுலக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.