சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் பட்டா கேட்டு தாலுக்கா அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற மக்களை போலீசார் தடுத்து நிறுத்தினர்.
எம்.ஜிஆர் நகர் 1வது வார்டு பகுதியை சேர்ந்த 120க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு எம்ஜிஆர் ஆட்சி காலத்தில் வீட்டுமனை வழங்கப்பட்டது. இதற்கு பட்டா கேட்டு பல்வேறு போராட்டங்கள் நடத்தியும் நடவடிக்கை எடுக்காததால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் ஊர்வலமாக சென்று தாலுக்கா அலுவலகத்தை முற்றுகையிட முயன்றனர்.
அப்போது அவர்களை தடுத்து நிறுத்திய போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியபின் பொதுமக்கள் கலைந்து சென்றனர்.