குற்றாலம் மெயின் அருவியில் இருந்து திடீரென உருண்டு வந்த கல் விழுந்து 5 பேர் படுகாயமடைந்ததால், சுற்றுலாப் பயணிகள் அச்சமடைந்துள்ளனர்.
தென்காசி மாவட்டம், குற்றாலம் மெயின் அருவியில், ஆண்கள், பெண்கள் என தனித்தனியாக குளிப்பதற்கு அனுமதிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், ஆண்கள் குளிக்கும் பகுதியில், திடீரென அருவியில் இருந்து உருண்டு வந்த பெரிய அளவிலான கல் ஒன்று சுற்றுலா பயணிகள் மீது விழுந்தது.
இதில் 5 சுற்றுலா பயணிகள் படுகாயம் அடைந்தனர். அங்கிருந்த போலீசார் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து காரணமாக குற்றாலம் மெயின் அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.