போஸ்னியா நாட்டில் பள்ளி பணியாளர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 3 பேர் உயிரிழந்தனர்.
சன்ஸ்கி மோஸ்ட் நகரில் பள்ளி ஒன்றில் தூய்மை பணியாளராக பணியாற்றி வருபவர் மெஹ்மத் உகாலிக். பள்ளியில் கோடை விடுமுறை விடப்பட்டு உள்ளது.
இருப்பினும் ஒரு சில மாணவர்கள் பள்ளிக்கு வருகை தந்த நிலையில் உகாலிக் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியால் பள்ளியின் டீன், செயலாளர் மற்றும் ஓய்வு பெற்ற ஆங்கில ஆசிரியை ஆகியோரை சுட்டு கொலை செய்துள்ளார்.
இதையடுத்து தானும் சுட்டுக்கொண்டு மயங்கி விழுந்துள்ளார். இதையறிந்த போலீசார் அவரை மீட்டு சிகிச்சைக்காக அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.