ஆடவர் டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசை பட்டியலை ஐ.சி.சி. வெளியிட்டுள்ளது.
இதில் பேட்ஸ்மேன்கள் பட்டியலில் இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் முதலிடத்திலும் நியூசிலாந்து வீரர் கேன் வில்லியம்சன் 2-ம் இடத்திலும் உள்ளனர்.
இந்திய வீரர் ரோகித் சர்மா 751 புள்ளிகள் பெற்று 6வது இடத்தில் உள்ளார். சிறந்த பந்து வீச்சாளர்கள் பட்டியலில் முதலிடத்தில் இந்திய வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் 870 புள்ளிகள் பெற்று முன்னிலை வகிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.