நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே கோயில் வேலைகளை தடுத்து நிறுத்தியதால் ஆத்திரமடைந்த மக்கள் கோயில் சாவியை வனத்துறையினரிடம் ஒப்படைக்க உள்ளதாக கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
மணிமுத்தாறு அருவிக்கரையில் உள்ள வன பேச்சியம்மன் கோயில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு, அப்பகுதியில் ஜெனரேட்டர் அமைத்து வேலைகள் நடைபெற்று வந்தன.
அப்போது புலிகள் காப்பக கோட்ட துணை இயக்குனர் இளையராஜா, கோயில் வேலைகளை தடுத்ததாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த மக்கள் கோயில் சாவியை வனத்துறையிடம் ஒப்படைக்க உள்ளதாக கூறி அங்குள்ள வன சோதனை சாவடியில் திரண்டனர். இதுகுறித்து தகவலறிந்த போலீசார் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.