அடுத்த ஏழு தினங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு மற்றும் எச்சரிக்கை:
மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழகம், புதுவையில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.
22.08.2024 மற்றும் 23.08.2024: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
24.08.2024 முதல் 28.08.2024 வரை: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு :
அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 34-35° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27 – 28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் ஏற்காடு AWS (சேலம்) 7, விண்ட் வொர்த் எஸ்டேட் (நீலகிரி) 6, தாலுகா அலுவலகம் பந்தலூர் (நீலகிரி) 5, தரங்கம்பாடி (மயிலாடுதுறை) 4 (சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது.