பிசிசிஐ செயலர் ஜெய் ஷா, ரோகித் சர்மா உள்ளிட்டோர் டி-20 உலகக் கோப்பையுடன் மும்பை சித்தி விநாயகர் கோயிலில் வழிபட்டனர்.
அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் நாடுகள் இணைந்து நடத்திய 9-ஆவது டி-20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது. இதன் மூலம் இந்திய அணி 2-ஆவது முறையாக டிராபி வென்று அதிக முறை டிராபி வென்ற அணிகளின் பட்டியலில் 3-ஆவதாக இணைந்தது.
இந்நிலையில், பிசிசிஐ செயலர் ஜெய் ஷா, ரோகித் சர்மா உள்ளிட்டோர் டி-20 உலகக்கோப்பையுடன் பிரசத்தி பெற்ற மும்பை சித்தி கோயிலில் வழிபட்டனர். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறார்.