கடந்த கல்வியாண்டில் 10 மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வுகளில் நாடு முழுதும் 65 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் தோல்வி அடைந்துள்ளனர் என, மத்திய கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
பொதுத்தேர்வுகள் பற்றி ஆய்வு மேற்கொண்ட மத்திய கல்வி அமைச்சக அதிகாரிகள், பிளஸ் 2 பொதுத்தேர்வில் தோல்வி விகிதம் மத்திய கல்வி வாரியத்தில் 12 சதவீதமாகவும், மாநில கல்வி வாரியத்தில் 18 சதவீதமாகவும் உள்ளது என தெரிவித்தனர்.
முந்தைய கல்வியாண்டை ஒப்பிடுகையில், 2023ம் ஆண்டில் மாணவர்களின் ஒட்டுமொத்த செயல்திறன் குறைந்துள்ளது எனவும் எனினும், தேர்ச்சி சதவீதத்தில் மாணவியர் ஆதிக்கம் செலுத்தி வருவதாகவும் தெரிவித்தனர்.