கொல்கத்தாவில் பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து புதுச்சேரி ஜிப்மர் மருத்துவர்கள் கருப்பு டி -சர்ட் அணிந்தும், கையில் சிகப்பு ரிப்பன் கட்டி கொண்டும் நடனமாடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும், மருத்துவமனை வளாகம் முன்பு அமைக்கப்பட்டிருந்த திரையில், உச்ச நீதிமன்றத்தில், பெண் மருத்துவர் கொலை தொடர்பான வழக்கு திரையிடப்பட்டது.
புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை மருத்துவர்கள் கடந்த 9 நாட்களாக பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வந்த நிலையில், 10 -வது நாளில் நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்று, உண்மையான குற்றவாளியை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தினர்.