இந்தோனேசியாவில் தேர்தல் விதி மாற்றத்தை கண்டித்து ஏராளமான மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதிபர் பதவியிலிருந்து விலகவுள்ள ஜோக்கோ விடோடோவின் அரசியல் பலத்தை வலுப்படுத்தும் நடவடிக்கையாக தேர்தல் விதியில் மாற்றங்கள் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்த நிலையில், விதிகளில் மாற்றத்தை ஏற்படுத்துவதை கண்டித்து ஜகார்த்தாவில் உள்ள நாடாளுமன்றத்திற்கு வெளியே ஏராளமானோர் போராட்டத்தில் ஈடுபட்டு முழக்கங்களை எழுப்பினர்.