இஸ்ரேலின் தொடர் தாக்குதலினால் காசாவில் இதுவரை உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 40 ஆயிரத்தை கடந்துள்ளது.
இஸ்ரேல்-காசா போர் கடந்த 10 மாதங்களுக்கும் மேலாக நடைபெற்று வருகிறது. இந்த போரில் இதுவரை சுமார் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் உயிரிழந்துள்ளனர்.
ஆனால் காசாவில் பதுங்கி இருக்கும் ஹமாஸ் அமைப்பினரை முற்றிலும் அழிக்கும் வரை தாக்குதல் தொடரும் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்த நிலையில், காசாவில் இதுவரை உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 40 ஆயிரத்து 265-ஆக உயா்ந்துள்ளது.