கொட்டுக்காளி திரைப்படம் பல்வேறு சர்வதேச விழாக்களில் நல்ல பெயரை வாங்கிக் கொடுத்திருப்பது மகிழ்ச்சியளிப்பதாக நடிகர் சூரி தெரிவித்துள்ளார்.
வினோத் ராஜ் இயக்கத்தில், சூரி, அன்னா பென் ஆகியோர் நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் கொட்டுக்காளி.
இந்த திரைப்படத்தை நடிகர் சிவகார்த்திகேயன் தயாரித்துள்ளார். இந்நிலையில் ரசிகர்களுடன் திரைப்படத்தை பார்ப்பதற்காக சென்னை ரோகிணி திரையரங்குக்கு வந்த சூரி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது பேசிய அவர், சிவகார்த்திகேயனுடன் பல திரைப்படங்களில் நடித்திருப்பதாகவும் முதல்முறையாக அவரது தயாரிப்பில் இணைந்திருப்பது மகிழ்ச்சி அளிப்பதாகவும் தெரிவித்தார். கருடன், விடுதலை போன்ற படங்களில் இருந்து முற்றிலும் மாறுபட்ட கதையம்சம் கொண்ட படமாக கொட்டுக்காளி இருக்கும் எனவும் அவர் கூறினார்.