காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டுவதற்கு சுற்றுச்சூழல் அனுமதி கோரி மத்திய அரசிடம் கர்நாடக அரசு மீண்டும் விண்ணப்பம் அளித்துள்ளது.
காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்ட கர்நாடக அரசு தீவிரமாக முயற்சிகள் எடுத்து வரும் நிலையில், இதற்கு தமிழ்நாடு அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
இந்நிலையில், காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டுவதற்கு சுற்றுச்சூழல் அனுமதி கோரி மத்திய அரசிடம் கர்நாடக அரசு விண்ணப்பம் அளித்துள்ளது.
மேலும் இந்த விண்ணப்பத்தை பரிசீலிக்க தமிழ்நாடு அரசின் ஒப்புதல் தேவையில்லை என்றும், மேகதாதுவில் அணை கட்ட உச்சநீதிமன்றம் எந்தத் தடையும் விதிக்கவில்லை எனவும் கர்நாடக அரசின் விண்ணப்பத்தில் குறிப்பிட்டுள்ளது.
காவிரியில் மேகதாது அணையை கட்டியே தீருவோம் என்று கர்நாடக அரசு உறுதி கொண்டு உள்ள நிலையில் தற்போது மத்திய அரசிடம் விண்ணப்ப மனு அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அத்துடன், மேகதாது அணை கட்ட தமிழக அரசிடம் ஒப்புதல் தேவையில்லை என்றும் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளதால், தமிழக அரசு இந்த விவகாரத்தை எப்படி எதிர்கொள்ளப்போகிறது என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.