நெல்லை மாவட்டம் மாஞ்சோலை மலைப்பகுதியில் அமைந்துள்ள அரசுத் தொடக்கப்பள்ளி போதிய மாணவர் எண்ணிக்கை இன்றி மூடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ள நிலையில் முன்னாள் மாணவர்களின் சந்திப்பு நிகழ்வு நடைபெற்றது.
மாஞ்சோலை மலைப்பகுதியில் அமைந்துள்ள நாலுமுக்கு தொடக்கப் பள்ளியில் ஏராளமான மாணவர்கள் பயின்று வந்தனர்.
இந்நிலையில் தேயிலைத் தோட்ட நிர்வாகத்தின் குத்தகைக்காலம் நிறைவடைய உள்ளதால் BBTC நிறுவனம் அதன் அனைத்து செயல்பாடுகளையும் நிறுத்தி உள்ளது.
மேலும், மலைப்பகுதியில் வசிப்பவர்கள் சமவெளி பகுதிக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டனர். இதனால் தொடக்கப்பள்ளி மாணவர்கள் இல்லாமல் மூடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இதனையடுத்து தொடக்கப்பள்ளியில் முன்னாள் மாணவர்களின் சந்திப்பு நிகழ்வு நடைபெற்றது.
மீண்டும் பள்ளிக்கு வந்ததை அவர்கள் கேக் வெட்டி கொண்டாடினாலும்,தாங்கள் படித்த பள்ளி மூடும் நிலையில் இருப்பது வேதனையளிப்பதாகவும் தெரிவித்தனர்.