பெண்கள் பாதுகாப்பு குறித்த ஓவியத்தை சிவகாசியை சேர்ந்த இளைஞர் சூரிய ஒளியினால் வரைந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்.
விருதுநகர் மாவட்டம் திருத்தங்கல் பகுதியைச் சேர்ந்த கார்த்திக், இளம் வயதிலிருந்து ஓவியம் வரைவதில் ஆர்வம் காட்டி வந்துள்ளார்.
இந்நிலையில், நாட்டில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், பெண்கள் பாதுகாப்பு குறித்த ஓவியத்தினை சூரிய ஒளி மூலமாக வரைந்து அசத்தியுள்ளார். இந்த ஓவியம் இணையத்தில் வைரலாகி வருகிறது.