ராணிப்பேட்டை அருகே ரயில் தண்டவாளத்தில் இரும்பு துண்டு மற்றும் கல் வைத்த இளைஞரை போலீசார் கைது செய்தனர்.
முகுந்தராயபுரம் ரயில் நிலையம் மற்றும் திருவலம் ரயில் நிலையத்திற்கு இடைப்பட்ட தண்டவாளத்தின் மீது கடந்த 17ம் தேதி நபர் ஒருவர் 9 அடி இரும்பு துண்டு, கல் ஆகியவற்றை வைத்துச் சென்றார்.
இதனை கண்டறிந்த ரயில்வே ஊழியர்கள் உடனடியாக அப்புறப்படுத்தியதால் விபத்து தவிர்க்கப்பட்டது. இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வந்த போலீசார் தண்டவாளத்தில் இரும்பு துண்டு மற்றும் கல் வைத்துச் சென்ற நவீன் குமார் என்ற இளைஞரை கைது செய்தனர்.