நீலகிரி மாவட்டம் உதகையில் உள்ள தொட்டபெட்டா மலைச்சிகரத்திற்கு செல்ல நாளை முதல் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
தொட்டபெட்டா மலைச்சிகரத்தில் உள்ள காட்சி முனையை காண ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை புரிவது வழக்கம்.
இந்நிலையில் மலைச்சிகரத்துக்கு செல்லும் சாலையில் அமைக்கப்பட்டிருந்த பாஸ்ட் டேக் மற்றும் சோதனை சாவடியை மாற்று இடத்தில் அமைக்கும் பணி நடைபெற்று வந்ததால் கடந்த 4 நாட்களாக தொட்டபெட்டாவுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் நாளை முதல் சுற்றுலா பயணிகள் தொட்டபெட்டாவுக்கு செல்ல அனுமதி வழங்கப்படும் என வனத்துறை தெரிவித்துள்ளது.