மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்தின் பிறந்த நாளை ஒட்டி சென்னை, கோயம்பேட்டில் 71 பேருக்கு டாட்டூ போடும் உலக சாதனை நிகழ்ச்சி நடைபெற்றது.
கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் விஜயகாந்தின் பிறந்தநாள் விழா கொண்டாட்டம் நடைபெற்றது. இது 71-ம் ஆண்டு பிறந்த நாள் கொண்டாட்டம் என்பதால் உலக சாதனை நிகழ்வாக 71 பேருக்கு 71 நிமிடங்களில் விஜயகாந்த் முகத்தை டாட்டூ போடும் உலக சாதனை நிகழ்ச்சி நடைபெற்றது.
தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தொடங்கி வைத்த இந்த நிகழ்ச்சியில் கட்சி தொண்டர்கள், நிர்வாகிகள் என 71 பேருக்கு, 71 டாட்டூ கலைஞர்கள் ஒரே நேரத்தில் 71 நிமிடங்களில் டாட்டூ போட்டனர்.
அப்போது பிரேமேலதா விஜயகாந்த், எல்.கே.சுதீஷ் உள்ளிட்டோர் டாட்டூ போடுவதை நேரில் பார்வையிட்டனர்.