கன்னியாகுமரி மாவட்டம் திற்பரப்பு அருவியில் குளிக்க 6வது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக சாரல் மழை முதல் கனமழை வரை பெய்து வருகிறது. இதனால் பேச்சிப்பாறை அணையின் நீர்வரத்து அபாய அளவான 43.02 அடியை எட்டியது.
அணையில் இருந்து 581 கன அடிக்கு மேல் உபரிநீர் திறந்துவிடப்பட்டதால் கோதையாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இதனையடுத்து திற்பரப்பு அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுவதால் அருவியில் குளிக்க 6வது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது.