சிவகங்கையில் ஆடு, மாடுகளை பலியிட்டு நரிக்குறவ இன மக்கள் குலதெய்வ வழிபாடு நடத்தினர்.
பழமலைநகரில் 350-க்கும் மேற்பட்ட நரிக்குறவர் இன குடும்பங்கள் வசித்து வரும் நிலையில், இங்கு வசிக்கும் மக்களின் குலதெய்வமான காளியம்மன், மீனாட்சியம்மன், மாரியம்மன் உள்ளிட்ட சுவாமிகளுக்கு ஆண்டு தோறும் ஆடு மாடுகளை பலியிட்டு ஆவணித்திருவிழா கொண்டாடப்படுவது வழக்கம்,
அந்த வகையில் இந்த ஆண்டிற்கான பூஜைகளும் சிறப்பாக நடைபெற்றது. அதில் 21 எருமை மாடுகளும், 120 ஆடுகளையும் சுவாமிக்கு பலியிட்டு பக்தர்கள் வழிபாடு நடத்தினர்.