ராஜஸ்தான் மாநிலம், பிவாடியில் நகைக்கடையில் புகுந்து மர்மநபர்கள் கொள்ளையடித்து சம்பவத்தின் வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது.
பிவாடி பகுதியில் செயல்பட்டு வரும் நகைக்கடையில் வாடிக்கையாளர்கள் நகைகளை வாங்கி கொண்டிருந்தனர். அப்போது, திடீரென காரில் சென்ற மர்மகும்பல் காவலாளியை கம்பால் தாக்கியும் துப்பாக்கிச்சூடு நடத்தியும் நகைக்கடைக்குள் புகுந்தன.
மேலும், நகைக்கடை உரிமையாளர், காவலாளியை தாக்கி நகைகளை கொள்ளையடித்து தப்பியோடியுள்ளனர்.தகவலறிந்து வந்த போலீசார், காயமடைந்த 5 பேரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், கொள்ளையர்கள் காவலாளியை தாக்கும் சிசிடிவி காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.