ஜெர்மனியில் நடைபெற்ற கத்திக்குத்து சம்பவத்திற்கு ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.
சொலிங்கென் நகரம் உருவாகி 650 ஆண்டுகள் நிறைவு பெற்றதை அந்நாட்டு மக்கள் கோலாகலமாக கொண்டாடினர். இதில் ஏராளமானோர் பங்கேற்ற நிலையில் அங்கு வந்த மர்மநபர் பொதுமக்கள் மீது கத்தியால் சராமாரியாக குத்தி தாக்குதலை நடத்தினார்.
இதில் ஏராளமானோர் காயமடைந்த நிலையில் 2 ஆண்கள் 1 பெண் ஆகிய 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்நிலையில் இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.