சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி திருக்கோயிலில் நடைபெற்ற சுவாமி அம்பாள் திருக்கல்யாணம் மற்றும் பஞ்சமூர்த்தி வீதி உலா விமரிசையாக நடைபெற்றது.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சங்கர நாராயணசுவாமி திருக்கோயிலில் சில நாட்களுக்கு முன் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
இந்நிலையில், சங்கரலிங்க சுவாமி மற்றும் கோமதி அம்மனுக்கு திருக்கல்யாண வைபோகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து சங்கரலிங்க சுவாமி, கோமதி அம்மன் மற்றும் பஞ்சமூர்த்திகள் சப்பரத்தில் எழுந்தருளி வீதி உலா நடைபெற்றது.
இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.