நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே வீட்டுக்குள் கரடி நுழைந்த சம்பவம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
கிளென் டோல் அடுத்த அஞ்சாம் கல்லறை பகுதியில் உள்ள வீடு ஒன்றில் நுழைந்த கரடி சமையலறையில் இருந்த சர்க்கரை டப்பாவை எடுத்து சென்றது.
இதை கண்ட வீட்டின் உரிமையாளர் கரடியை விரட்டிய நிலையில் அருகில் உள்ள தேயிலை தோட்டத்திற்குள் புகுந்துவிட்டது.தொடர்ந்து வனத்துறையினர் கரடியை பிடிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.