ஐரோப்பிய நாடுகளின் ஆயுதங்களால் இந்தியா தாக்கப்படுவதாக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கவலை தெரிவித்துள்ளார்.
பின்லாந்தில் நடைபெற்ற சர்வதேச வெளியுறவு மற்றும் பாதுகாப்புக் கொள்கை மாநாட்டில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், ரஷ்யாவிடம் இருந்து இந்தியா எண்ணெய் வாங்குவதை விமர்சிக்கும் சில ஐரோப்பிய நாடுகள், மறுபுறம் இந்தியாவுக்கு எதிராக பயன்படுத்தப்பட்ட ஆயுதங்களை பாகிஸ்தானுக்கு விற்பனை செய்துள்ளதாக குற்றம்சாட்டினார்.
அதே சமயம் ஐரோப்பாவுக்கு ஆபத்து ஏற்படுத்தும் செயலில் இந்தியர்கள் ஈடுபடுவதில்லை என கூறிய ஜெய்சங்கர், இந்தியாவின் பாதுகாப்பு நலன்களை பாதிக்கும் வகையில் ஐரோப்பிய ஆயுதங்கள் பயன்படுத்தப்படுவது கவலைக்குரியது என்றும் குறிப்பிட்டார்.
மேலும், ஒவ்வொரு நாடும் தனது தேசிய நலனின் அடிப்படையில் முடிவுகளை எடுக்கிறது என கூறிய ஜெய்சங்கர், இந்தியாவும் தனது எரிசக்தி பாதுகாப்பு மற்றும் தேசிய நலன்களை முன்னிறுத்தியே செயல்படுகிறது என வலியுறுத்தினார்.
















