சனாதன தர்ம ஒழிப்பை பற்றி பேசிய திமுக, பழனியில் முத்தமிழ் முருகன் மாநாட்டை நடத்துவதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில், கடந்த ஆண்டில் சனாதன தர்மத்தை ஒழிப்போம் என்று பேசிய திமுகவினர், நிகழாண்டு முருகப்பெருமானுக்கு பிரமாண்டமாக விழா எடுப்பதாக தெரிவித்தார்.
சனாதன தர்ம ஒழிப்பு மற்றும் முத்தமிழ் முருகன் ஆகிய இரு மாநாடுகளிலும் அமைச்சர் சேகர் பாபு பங்கேற்பதாக கூறிய அண்ணாமலை, மக்களின் கோபத்தை உணர தொடங்கியதும் திமுகவினர் தங்களது நாடகத்தை மாற்றிவிட்டதாக குற்றம்சாட்டினார்.
திமுகவின் இந்த நாடகத்தை முருகப்பெருமான் பார்த்துக் கொண்டிருக்கிறார் என்பதை மறக்க வேண்டாம் என அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார்.