திருப்பதி தேவஸ்தான மருத்துவமனையில் பயிற்சி மருத்துவர் தாக்கப்பட்ட சம்பவத்தை கண்டித்து சக மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பதி தேவஸ்தானத்தின் கீழ் இயங்கும் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெடிக்கல் சைன்ஸ் மருத்துவமனையில் ஏராளமான மருத்துவர்கள் பணி புரிந்து வரும் நிலையில், பங்காரு ராஜூ என்பவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்,
இவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் எனக் கூறப்படும் நிலையில் அங்கு பணியில் இருந்த பெண் மருத்துவரை திடீரென தாக்கினார். இதனை கண்டித்த சக பயிற்சி மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.