கன்னியாகுமரி மாவட்டம், மீனச்சல் பகுதியில் உள்ள ஶ்ரீ கிருஷ்ண சுவாமி கோவிலில் கும்பாபிஷேக விழா சிறப்பாக நடைபெற்றது.
கேரளா கட்டட கலை அமைப்புடன் காட்சிதரும் இகோயிலில் கடந்த ஒரு வருட காலமாக புனரமைப்பு பணிகள் நடைபெற்று வந்தது.
இந்நிலையில் பணிகள் நிறைவுற்றதாலும், கிருஷ்ணஜெயந்தி விழாவை முன்னிட்டும் கும்பாபிஷேக விழா நடத்தப்பட்டது. இதில் கோபுர கலசத்திற்கு மாலை அணிவிக்கப்பட்டு புனித நீர் ஊற்றப்பட்டது.