ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அருகே ஆசிரியை தண்டித்ததில் காயமடைந்த மாணவி மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வருகிறார்.
சுந்தரமுடையான் கிராமத்தில் உள்ள அரசுப் பள்ளியில் ஜோகரா என்ற 9 வயது மாணவி, 4-ஆம் வகுப்பு படித்து வருகிறார். இவர் வகுப்பில் சக மாணவியிடம் பேசியதாக கூறப்படுகிறது.
இதனை கவனித்த ஆசிரியை வைரம், மாணவிகளை வகுப்பறையில் முட்டிபோட வைத்துள்ளார். சுமார் 1 மணி நேரம் முட்டிபோட வைத்ததால் காயமடைந்த மாணவி மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வருகிறார். சம்பவம் குறித்து அறிந்த பெற்றோர், ஆசிரியை மீது நடவடிக்கை எடுக்கவேண்டுமென கோரிக்கை விடுத்தனர்.