ஶ்ரீகிருஷ்ண ஜெயந்தி பண்டிகையை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு மத்திய அமைச்சர் எல்.முருகன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அவர் விடுத்துள்ள வாழ்த்து செய்தியில், பகவான் ஶ்ரீகிருஷ்ணர் அவதரித்த தினமான இன்று, நாட்டு மக்கள் அனைவருக்கும் ஶ்ரீகிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துகள் தெரிவித்துக் கொள்கிறேன்.
பகவத் கீதையின் வழி பகவான் ஸ்ரீகிருஷ்ணர் நமக்கு அளித்துள்ள போதனைகளை ஆழமாக பின்பற்றி, நாட்டில் ஒற்றுமை தழைத்தோங்க செய்து வாழ்வோம் என எல். முருகன் தெரிவித்துள்ளார்.